Oxford Mini English-Tamil Dictionary
மினி இங்கிலிஷ்-தமிழ் அகராதி
Price: 200.00 INR
ISBN:
9780190131579
Publication date:
25/03/2021
Paperback
664 pages
121x75mm
Price: 200.00 INR
ISBN:
9780190131579
Publication date:
25/03/2021
Paperback
664 pages
Oxford University Press & வ. முருகன்
அயல்மொழிக் கல்வி, அறிவியல் மொழிபெயர்ப்பு, அறிவுத் தேட்டம் ஆகிய முப்பெரும் பயன்பாடுகளைக் கடந்து மொழிப் பண்பாடுகளின் உரையாடலுக்கும் அதன் வழி மானிட ஒருமைப்பாட்டுக்கும் வித்திடும் வித்தகத் துணையத்தக்கன இருமொழி அகராதிகள். ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் இந்தியாவின் முந்தைய இரண்டு ஆங்கிலம் தமிழ் அகராதிகள் ஆங்கிலம் கற்போர், கற்பிப்போர் தேவைகளை முதன்மைப்படுத்திக் கட்டமைக்கப்பட்ட நிலையில், இம்மூன்றாவது இருமொழி அகரமுதலி பன்முக ஆங்கிலம் தமிழ் உரையாடலுக்குக் கைத்துணையாகுந்தகை நோக்கங்களைக் கொண்டது. இவ்வகையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றும் ‘யாதானும் நாடாமால் ஊராமால்’ என்றும் 2500 ஆண்டுகளுக்கு மேலாக முழங்கிவரும் ஒப்பிலாத் தமிழ்க் கருத்தியலுக்கு இது வித்திடுவதாகத் துணைசெய்யக் கூடும்.
Oxford University Press & வ. முருகன்
Description

20,000 தலைச்சொற்களையும் வழிச்சொற்களையும் உள்ளடக்கிய இந்த அகராதியின் சொற்றொகுதியில் அறிவியல், தொழினுட்பம், அச்சு மற்றும் மின்ணுவியல் ஊடகங்கள் மற்றும் பல்வேறு பணித்துறைகள் தழுவிய சொற்கள் கவனமுடன் தெரிவுசெய்து சேர்க்கப்பட்டுள்ளதைக் காணலாம். தலைச்சொற்களின் துல்லியமான தமிழ் ஒலிபெயர்ப்பும் இலக்கணக் குறிப்புகளும் மாணவர்ப் பயனாளர்களுக்குப் பெரிதும் நலம் பயக்க வல்லன.
இந்த அகரமுதலியல் தரப்பட்டுள்ள தமிழ்ப் பொருள்கள் மூன்று வகையானவை. ஆங்கிலத் தலைச்சொற்களுக்கு இணைப்பொருள்/நேர்ப்பொருள் ஒரு வகை. சற்றே சிக்கலான கருத்தியல்/அறிவியல் சொற்களுக்கு வரையறை வடிவரப் பொருள் இரண்டாவது வகை. கவிஞர் கண்ணதாசனின் பாலமரப் பாடல் வரியான ‘பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்’ என்பதற்கு ஆற்றுப்படை யாத்த கவிஞர் வைரமுத்து இவ்வரியின் ‘பண்புத உயரத்தைக்’ கணக்கில் கொண்டு அடுத்த வரியில் ‘பொங்கிரும் தாய்மையில் சேயுடன் நின்றாள்’ எனக் கண்ணதாசன் உரை எழுதுவதாகக் குறிப்பிடுவர். இந்த உள்ளொளி முன்னம் வகைப் பொருளாக ஈண்டுப் பயன்கொள்ளப்பட்டுள்ளன.
பொருள் தெளிவு, வழக்காறு மற்றும் அறிவாற்றலைத் தகவு நாடி Oxford Advanced Learner’s Dictionary of Current English, Concise Oxford English Dictionary, Merriam-Webster’s Collegiate Dictionary ஆகிய மூன்று ஆங்கில அகராதிகளும், ஆங்கிலம் தமிழ்ச் சொற்களஞ்சியம், 14-தொகுதி கலைச்சொல் பேரகராதி, அருங்கலைச்சொல் அகரமுதலி ஆகிய மூன்று இருமொழி அகராதிகளும் இங்குப் பார்வைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு நன்றி கூறுவது வாழ்க்கென்று தாய்க்கு நன்றி கூறுவதாகும்.
தமிழுக்கு இக்கொடையை நல்கிய அகராதியியல் நம்பகத்தன்மையின் செந்தர, கட்டளை வடிவமான ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் இந்தியாவுக்கும் அப்பெரும்பெயர் நிறுவனத்தின் அகராதியியல் இன்முகங்களான சர்மிலா குகா, மதுஜா சென் ஆகியோருக்கும் தரவு உள்ளிட வல்லார் ரா. கிரிஷ் அவர்களுக்கும் நன்றி கூறுவது என் ஆசிரியக் கடனாகும்.
வ. முருகன்
Oxford University Press & வ. முருகன்
Features
This dictionary has over 20,000 words and derivatives with detailed translations in Tamil.
(a) Accurate pronunciation of the English words in Tamil
(b) Grammatical information of each word is provided
(c) A proper guide for usage of the dictionary in Tamil
(d) List of abbreviations used in the dictionary
(e) Compact and portable and can be carried wherever one goes
(f) Additional Online Resource: Tamil English practice grammar
Oxford University Press & வ. முருகன்
Description
அயல்மொழிக் கல்வி, அறிவியல் மொழிபெயர்ப்பு, அறிவுத் தேட்டம் ஆகிய முப்பெரும் பயன்பாடுகளைக் கடந்து மொழிப் பண்பாடுகளின் உரையாடலுக்கும் அதன் வழி மானிட ஒருமைப்பாட்டுக்கும் வித்திடும் வித்தகத் துணையத்தக்கன இருமொழி அகராதிகள். ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் இந்தியாவின் முந்தைய இரண்டு ஆங்கிலம் தமிழ் அகராதிகள் ஆங்கிலம் கற்போர், கற்பிப்போர் தேவைகளை முதன்மைப்படுத்திக் கட்டமைக்கப்பட்ட நிலையில், இம்மூன்றாவது இருமொழி அகரமுதலி பன்முக ஆங்கிலம் தமிழ் உரையாடலுக்குக் கைத்துணையாகுந்தகை நோக்கங்களைக் கொண்டது. இவ்வகையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றும் ‘யாதானும் நாடாமால் ஊராமால்’ என்றும் 2500 ஆண்டுகளுக்கு மேலாக முழங்கிவரும் ஒப்பிலாத் தமிழ்க் கருத்தியலுக்கு இது வித்திடுவதாகத் துணைசெய்யக் கூடும்.
20,000 தலைச்சொற்களையும் வழிச்சொற்களையும் உள்ளடக்கிய இந்த அகராதியின் சொற்றொகுதியில் அறிவியல், தொழினுட்பம், அச்சு மற்றும் மின்ணுவியல் ஊடகங்கள் மற்றும் பல்வேறு பணித்துறைகள் தழுவிய சொற்கள் கவனமுடன் தெரிவுசெய்து சேர்க்கப்பட்டுள்ளதைக் காணலாம். தலைச்சொற்களின் துல்லியமான தமிழ் ஒலிபெயர்ப்பும் இலக்கணக் குறிப்புகளும் மாணவர்ப் பயனாளர்களுக்குப் பெரிதும் நலம் பயக்க வல்லன.
இந்த அகரமுதலியல் தரப்பட்டுள்ள தமிழ்ப் பொருள்கள் மூன்று வகையானவை. ஆங்கிலத் தலைச்சொற்களுக்கு இணைப்பொருள்/நேர்ப்பொருள் ஒரு வகை. சற்றே சிக்கலான கருத்தியல்/அறிவியல் சொற்களுக்கு வரையறை வடிவரப் பொருள் இரண்டாவது வகை. கவிஞர் கண்ணதாசனின் பாலமரப் பாடல் வரியான ‘பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்’ என்பதற்கு ஆற்றுப்படை யாத்த கவிஞர் வைரமுத்து இவ்வரியின் ‘பண்புத உயரத்தைக்’ கணக்கில் கொண்டு அடுத்த வரியில் ‘பொங்கிரும் தாய்மையில் சேயுடன் நின்றாள்’ எனக் கண்ணதாசன் உரை எழுதுவதாகக் குறிப்பிடுவர். இந்த உள்ளொளி முன்னம் வகைப் பொருளாக ஈண்டுப் பயன்கொள்ளப்பட்டுள்ளன.
பொருள் தெளிவு, வழக்காறு மற்றும் அறிவாற்றலைத் தகவு நாடி Oxford Advanced Learner’s Dictionary of Current English, Concise Oxford English Dictionary, Merriam-Webster’s Collegiate Dictionary ஆகிய மூன்று ஆங்கில அகராதிகளும், ஆங்கிலம் தமிழ்ச் சொற்களஞ்சியம், 14-தொகுதி கலைச்சொல் பேரகராதி, அருங்கலைச்சொல் அகரமுதலி ஆகிய மூன்று இருமொழி அகராதிகளும் இங்குப் பார்வைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு நன்றி கூறுவது வாழ்க்கென்று தாய்க்கு நன்றி கூறுவதாகும்.
தமிழுக்கு இக்கொடையை நல்கிய அகராதியியல் நம்பகத்தன்மையின் செந்தர, கட்டளை வடிவமான ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் இந்தியாவுக்கும் அப்பெரும்பெயர் நிறுவனத்தின் அகராதியியல் இன்முகங்களான சர்மிலா குகா, மதுஜா சென் ஆகியோருக்கும் தரவு உள்ளிட வல்லார் ரா. கிரிஷ் அவர்களுக்கும் நன்றி கூறுவது என் ஆசிரியக் கடனாகும்.
வ. முருகன்
Oxford English-English-Hindi Dictionary (Second Edition)
Suresh Kumar & Ramanath Sahai
Oxford Essential Arabic Dictionary
Oxford Languages
Oxford Russian Mini Dictionary (Third Edition)
Oxford Languages, Edited by Della Thompson & Project Manager Maurice Waite
Oxford Essential Spanish Dictionary
Oxford Languages
Oxford Essential French Dictionary (First Edition)
Oxford Languages
Oxford Essential Russian Dictionary
Oxford Languages
Oxford School Spanish Dictionary
Oxford University Press
English-English-Marathi Dictionary
Edited by Dr R V Dhongde
COMPACT ENGLISH-ENGLISH-TAMIL DICTIONARY (PLC)
V. Murugan & V. Jayadevan